பெங்களூருவில் இருந்து ஆரணிக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மதிப்பில குட்கா பறிமுதல்.

பெங்களூருவில் இருந்து ஆரணிக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மதிப்பில குட்கா பறிமுதல். 2 பேரை கைது

Update: 2021-03-25 10:42 GMT

வேலூர் வழியாக குட்கா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் அடுத்த மாங்காய் மண்டி பகுதியில் வேலூர் வடக்கு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அட்டை பெட்டிகளில் குட்கா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தில் ஈடுபட்ட மைசூரை சேர்ந்த ஜீனித் கான்(22), விவேக் ராஜ்(29) ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News