வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம்: எம்பி கதிர் ஆனந்த்

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும் என சத்துவாச்சாரி சுரங்கபாதையை துவங்கி வைத்த எம்பி கதிர் ஆனந்த் கூறினார்

Update: 2022-01-26 10:30 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கபாதையை துவங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் 

வேலூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதனால் ரூ..1. 20 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் பணி நிறைவடைந்து அதனை இன்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விழாவில்வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சுரங்கபாதை 15 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கையை அடுத்து நிறைவேறியது, இதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க கந்தனேரி,,வெட்டுவானம், மற்றும் ஆம்பூர் பைபாஸ் ராஜுவ் காந்தி சிலை அருகில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும். அதற்காக அடிக்கல் நாட்டப்படும், 

மத்தியில் எந்த அரசு இருந்தாலும் மக்கள் நலனுக்காக திமுக வாதாடி திட்டங்களை பெறுகிறோம். அந்த வகையில் குடியாத்தத்தில் ரூ.221 கோடி மதிப்பில் சுற்றுசாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் மாவட்டத்தில் மத்திய அரசிடம் தேவையான அனைத்து நலத்திட்டங்களை கேட்டு பெற்றுவருகிறோம். காட்பாடி ரயில்வே மேம்பாலம் கூடுதல் மேம்பாலம் அமைக்கவும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பழைய பாலமும் சீரமைக்கப்படவுள்ளது என்று கூறினார்

Tags:    

Similar News