வேலூரில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் உடற்தகுதி தேர்வு தொடங்கியது
வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கிய இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர்
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கு 2 ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26 ம் தேதி தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களுக்கு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்த குதி தேர்வுகள் எஸ்பி செல்வகுமார் தலைமையில் நடந்து வருகிறது . ஒரு நாளைக்கு 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 26 ம்தேதி முதல் 30ம் தேதி வரை 2ம் நிலை ஆண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 1,610 பேர் 2 ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் .
இதைத் தொடர்ந்து பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று காலை தொடங்கி வரும் 5 ம்தேதி வரை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதல் நாளான இன்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உயரம் அளவிடுதல் பணி நடந்தது. தொடர்ந்து ஓட்டத்தேர்விலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.