வேலூரில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு: 107 முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்பு

வேலூரில் இன்று நடந்த 2 ம் நிலை காவலர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வில் 107 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்

Update: 2021-08-09 12:50 GMT

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 2வது கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது

தமிழகத்தில் 2 ம்நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26 ம்தேதி தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வுகள் எஸ்பி செல்வகுமார் தலைமையில் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்படுகிறது . அதன்படி, கடந்த 26ம்தேதி முதல் 30ம் தேதி வரை 2 ம் நிலை ஆண் காவலர்களுக்கான முதல் கட்ட உடற்தகுதி தேர்வில் 1,610 பேர் 2 ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு 2ம் தேதி தொடங்கி 3 ம் தேதி வரை நடந்தது. கடந்த 4 ம் தேதி 2 ம் நிலை ஆண் காவலர்களுக்கு 2 ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது . இதில் 269 பேர் தகுதி பெற்றனர் .

இதற்கிடையில் இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 2வது கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது. மொத்தம் 110 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது . இதில் 107 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பிறகே தேர்வு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நாளை பெண்களுக்கான 2 வது கட்ட உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News