வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

அமமுக வேட்பாளர் குதிரை, குக்கருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-19 12:19 GMT

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வேலூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்  குதிரை, குக்கருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில்  வேட்பாளராக V.D.தருமலிங்கம் அறிவிக்கப்பட்டார்.  அவர்  வேட்பு மனுவை வேலூர் தாசில்தார்  அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கணேஷிடம் தாக்கல் செய்தார்.

முன்னதாக வேலூர் பழைய மாநகராட்சியில் இருந்து குதிரை, குக்கர், குத்தாட்டத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு முதலில் அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்பு பால் பாலாஜி என்பவர்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் வேலூர் மாநகராட்சி முன்னாள்  துணை மேயர் தருமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News