பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

வேலூரில் திமுக பெண் வேட்பாளர் பொதுமக்களுக்கு மீன் வெட்டிக் கொடுத்தும், டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரிப்பு;

Update: 2022-02-07 09:45 GMT

டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் காஞ்சனா

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா, வேலூர் மக்கான் பகுதி மற்றும் அம்பேத்கார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் மீன் விற்பனை கடைக்கு சென்று பொதுமக்களுக்கு மீன் வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.  அங்குள்ள டீ கடையில் டீ தயாரித்துக் கொடுத்தும், பிரியாணி கடையில் பிரியாணி எடுத்துக் கொடுத்தும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News