ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம் போலீசார்
வேலூரில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை இழந்த வெல்டிங் தொழிலாளியின் பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை;
ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது
வேலூர் மாவட்டம் வசூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மூலம் இவருக்கு தெரியாமல் வங்கி கணக்கிலிருந்து ரூ.22000/- இரண்டு தவணைகளாக எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வினோத்குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் அவர் இழந்த ரூ.22000/ பணத்தை மீட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ்கண்ணன் மூலமாக வெல்டிங் தொழிலாளியிடம் ஒப்படைத்தனர்.