தொற்றுபரவல் தடுப்பு குறித்து வியாபாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

வேலூர் மாவட்ட வியாபார சங்க பிரதிநிதிகளுடன் தொற்றுபரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-05-17 09:15 GMT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வியாபார சங்க பிரதிநிதிகளுடன் தொற்றுபரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியிலுள்ள வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், லாரி உரிமையாளர்கள் சங்கம், காய்கறி பூ வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், மீன் வியாபாரிகளுடன் கொரானா நோய் தொற்று பரவல் இல்லாமல் வியாபாரம் செய்வது குறித்தும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்(பொ) ஜெ.பார்த்திபன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்தைத் தவிர சில்லறை வியாபாரம் செய்வதை தவிர்த்து, தற்காலிக சித்தூர் பேருந்து நிலையம் செயல்பட்ட இடத்தில் சில்லரை மீன் விற்பனை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு மதிவாணன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஆல்பர்ட் ஜான் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திரு நா .சங்கரன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திரு.மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் மரு.சித்திரசேனா வருவாய், கோட்டாட்சியர் திரு.கணேஷ், மாநகராட்சி உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News