வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணி

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணிகள் நடைபெற்றது.

Update: 2021-03-31 01:51 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்குமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம்(தனி), கே. வி. குப்பம்(தனி), அணைக்கட்டு ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 351 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 728 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், காட்பாடி தொகுதிக்குட்பட்ட 349 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், கே.வி.குப்பம்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 311 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் குடியாத்தம்(தனி) தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி நடைபெற்றது. இப்பணிகள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். பின்பு அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News