வெளிநாட்டு உறவினர்களிடம் பேச நளினி , முருகனுக்கு மத்திய அரசு அனுமதி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகனுக்கு வெளிநாட்டு உறவினர்களிடம் பேச மத்திய அரசு அனுமதி

Update: 2021-07-18 13:31 GMT

முருகன், நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் , அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வீடியோ காலில் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, முருகன் இருவருக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர் . ஆனால், சிறையில் உள்ள கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச, மத்திய அரசு அனுமதி தேவை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் . எனவே நீதிமன்ற உத்தரவின் ஆணையை மத்திய அரசுக்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

தற்போது நளினி , முருகனுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  முருகன் லண்டனில் உள்ள தங்கையிடமும், இலங்கையில் உள்ள முருகனின் தாயாருடன் நளினியும் வீடியோ காலில் பேச மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இருவரும் ஓரிரு நாட்களில் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்றனர் .

Tags:    

Similar News