கட்சி கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்கை தயாரித்து வரும் பேக்கரி.

வேலூரில் மக்களை கவர கட்சி கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்கை தயாரித்து வரும் பேக்கரி;

Update: 2021-03-20 06:00 GMT

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாநகர் கொணவட்டத்தை சேர்ந்த தனியார் பேக்கரி கடை உரிமையாளர் மக்களை கவரும் வகையில் பல்வேறு கட்சிகளின் சின்னம் மற்றும் கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்குககளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.

அதன்படி தற்போது தி.மு.க, அதி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உட்ளிட்ட கட்சிகளின் சின்னம் மற்றும் கொடி பொறிக்கப்பட்ட கேக்குகளை தயாரித்து வருகிறார். இதற்க்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News