முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை
முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தமாரிகுப்பம் பகுதியில் உள்ள முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்
வேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வேலூர், சத்துவாச்சாரி வசந்தம்நகரில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது இவர் வீரமணிக்கு பினாமி என கூறப்படுகிறது
வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தில் கே சி வீரமணியின் உதவியாளரான புகழேந்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்