இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் 190-வது நினைவு நாள்

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் 190-வது நினைவு நாள் வேலூரில் அவரது குடும்பத்தாரால் அனுசரிக்கப்பட்டது

Update: 2022-01-30 14:15 GMT

இலங்கையின் கடைசி மன்னரின் வாரிசுகளான அவரின் குடும்பத்தார்கள் இன்று குரு பூஜை செய்து வழிபட்டனர்

இலங்கையை ஆட்சி புரிந்த கடைசி தமிழ் மன்னர் விக்ரம இராஜசிங்கன் . மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் 1798-ம் ஆண்டு, முதல் இலங்கை மன்னராக முடிசூட்டப்பட்டு ஆட்சி புரிந்து வந்தார்.

1815-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி வெள்ளையருடன் நடந்த போரில் இவர் சிறை கைதியாக பிடிக்கபட்டு மார்ச் 2-ம் தேதி கைதியாக வேலூர் கோட்டையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். 1832-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் தனது 52 -வது வயதில் சிறையிலே காலமானார்.

மன்னர் அவர் மனைவிகள் மற்றும் அவர் மகன் ரங்கராஜன் ஆகியோரின் கல்லறைகள் வேலூர் பாலாற்று கரையோரம் அமைந்து இருந்தது.  அதன் நினைவாக 1990-ம் ஆண்டு இப்பகுதியில் தமிழக அரசின் சார்பில் முத்து மண்டபம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒவ்வொறு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி அவருடைய நினைவு நாளை மன்னர்களின் வாரிசுதாரர்கள் முத்து மண்டபத்தில் குரு பூஜை நடத்தி வருகின்றனர்.

அதன் படி இன்று நடந்த குருபூஜை விழாவில் மன்னரின் வாரிசுகளான அசோக் ராஜா மற்றும் அவரின் குடும்பத்தார்கள் இன்று குரு பூஜை செய்து இலங்கையின் கடைசி தமிழ் மன்னரை வழிபட்டனர்.

Tags:    

Similar News