100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வேலூரில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று(மார்ச் 08) வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கலை நிகழச்சிகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ௧௦௦% வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.