தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
வேலூர் மாநகட்சிக்குட்பட்ட பகுதியில் கடைகளில் சோதனை செய்த போது 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று (24.02.2021) மதியம் வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில், இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சுண்ணாம்புகார தெருக்களில் திடீர் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் காகிதப்பட்டறை ஆற்காடு ரோட்டில் பார்சல் சர்வீஸ் கடையின் மூலம் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது எந்தெந்த கடைக்காரர்களுக்கு பிளாஸ்டிக் தரப்படுகிறது என்ற தகவல் பெறப்பட்டது. அதன் பேரில் இன்று சுண்ணாம்புகார தெருவில் முக்கிய மூன்று கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு கடையில் 1.5 டன் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் இரண்டரை லட்சம் ஆகும். மேலும் கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.