பறக்கும் படை சோதனை: ஒரு லட்சம் பறிமுதல்
வேலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில், உரிய ஆவணம் இல்லாத ஒரு லட்சம் பணம் பறிமுதல்.;
வேலூர் மக்கான் சிக்னல் அருகே பறக்கும் படை அலுவலர் அமுதவல்லி தலைமையில் பறக்கும் படைகயினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கல்பாக்கத்தில் இருந்து வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர் வேனில் டிரைவர்கள் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் ரூ ஒரு லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அவர்கள் கல்பாக்கத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர். அவர் மாவட்ட கருவூலத்தில் சேர்த்தார்.