சிறைக்குள் கஞ்சா வீசும் நபர் கைது

வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்குள் 45 கிராம் கஞ்சா வீச முயன்ற நபர் கைது, கஞ்சா பறிமுதல்.

Update: 2021-03-02 04:54 GMT

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் கைது.

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையின் சுற்றுச்சுவருக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி சிறைக்குள் 45 கிராம் கஞ்சா பொட்டலத்தை சிவசக்தி என்ற வாலிபர் வீச முயன்றுள்ளார். இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் சிவசக்தியை விரட்டி பிடித்து, மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சிறை துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பிடிபட்ட நபரையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் மத்திய சிறையில் கஞ்சா வீச முயன்ற கன்சால்பேட்டையை சேர்ந்த சிவசக்தி(26) என்பவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 45 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News