சிறுமியை கர்பமாக்கிய இளைஞர் மீது போக்சோவில் நடவடிக்கை
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏற்றி கர்பமாக்கி, மாத்திரை மூலம் கலைத்த 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு;
வேலூர் அருகே 17 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்துள்ளார். சிறுமிக்கும் அதே கடையில் வேலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் நெருங்கிப் பழகியதாகவும், அதனால் சிறுமி கர்ப்பம் ஆனதாகவும், கர்ப்பத்தை கலைக்க சிறுவன் மருந்து கடையில் மாத்திரை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது சிறுமியின் கர்ப்பம் கலைந்தது தெரியவந்தது. இது குறித்து டாக்டர், சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அதில், சிறுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு டாக்டர் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மகளீர் காவல் துறையினர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். சிறுமியை கர்ப்பமாக்கி, அதனை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.