முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2021-02-25 09:30 GMT

முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூரில் நடைபெற்றது.

குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான முன்னால் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் அவர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாகவும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு நல சங்கத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் சிறைவாசிகள் 14 பேருக்கு ஆடு வாங்குதல், கறவை மாடு வாங்குதல், மளிகை கடை வைத்தல் உள்ளிட்ட சுய தொழில் தொடங்குவதற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இதனை சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கலந்துகொண்டு வழங்கினார்.

Tags:    

Similar News