ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளாக அரசுக்கு பல்வேறு கட்ட கோரிக்கைகள் வைத்தும், இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.