கால்வாயில் சிக்கிய கன்றுகுட்டியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
14 மணி நேரமாக கால்வாயில் சிக்கி இருந்த கன்று குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.;
காட்பாடி அடுத்த புதுபள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவருடைய கன்றுக்குட்டி ஒன்று இரவு முதல் காணவில்லை என தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் வீஜிராவ்நகர் பகுதியில் உள்ள கால்வாயில் கன்றுகுட்டி சிக்கிக் கொண்டிருப்பது கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி தீயணை துறையினர் கால்வாயை உடைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கன்றுக்குட்டியின் உரிமையாளர் ரகுவிடம் ஒப்படைத்தனர்.