மாட்டு அலங்கார பொருட்கள் விற்பனை அமோகம்

Update: 2021-01-12 10:30 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி வேலுார் பொய்கை வாரசந்தையில் மாட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது.

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை பிரபலமானது. இதில் முக்கியமானது மாட்டு வியாபாரம் ஆகும். பொங்கலையொட்டி கடந்த வாரம் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த வாரம் அதனை காட்டிலும் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் விழாவையொட்டி மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்கவும் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரபலமான எருது விடும் விழாவுக்கும் தேவையான கயிறு, சலங்கை, மணி, அலங்கார பூ ஆகியவற்றை வாங்குவதில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News