வேலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் வந்தது

வேலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் வந்ததுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-06-16 12:15 GMT

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது . தமிழகத்தில் 11 மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகளவில் உள்ளது . இதனால் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது . வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.

இந்நிலையில் , மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசியை வழங்காததால், திடீர் தடுப்பாடு ஏற்பட்டது . இதனால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 8 ம்தேதி முதல் 10 ம் தேதிவரை 3 நாட்கள் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது . இதையடுத்து குறைந்த அளவிலான தடுப்பூசி வேலூர் மாவட்டத்திற்கு வந்தது . இதனால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது .

இந்நிலையில் நேற்றும் மாநகராட்சி சார்பில் 850 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது . சிறப்பு முகாமிற்கு வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர் .

இந்நிலையில் இன்று 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது . இதை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் , சிறப்பு முகாமிற்கு பிரித்து அனுப்பப்பட்டது . வேலூர் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி மாநகராட்சி முகாம் உள்ளிட்ட 20 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News