காட்பாடியில் நாளை முதல் செயல்பட இருந்த போக்குவரத்து மாற்றம் ரத்து

காட்பாடியில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக நாளை முதல் செயல்பட இருந்த போக்குவரத்து மாற்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-31 12:17 GMT

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஒடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளது.அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உத்தேசித்துள்ளது. நாளை முதல் மேம்பால பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் வேலூர் சித்தூர் இடையே சில வாகனங்கள் திருமணம் சேர்க்காடு செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் மூடப்படும் என்று அறிவித்திருந்த ரெயில்வே பாலம் தற்காலிகமாக திறக்கப்படுகிறது. ஆனால், கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்வதை தடைசெய்யப்படுகிறது. மற்ற வாகனங்கள் அந்த பாலத்தின் வழியே கவனமாக செல்ல வேண்டும். மேலும் பாலம் பழுதானால் உடனடியாக அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்போது தேர்வு நேரம் நெருங்குவதால் மேம்பால பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தற்காலிகமாக மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் மேம்பால பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News