நான்கு வழிச்சாலையாக மாறும் காட்பாடி - திருவலம் சாலை
திருவலம் காட்பாடி இடையே உள்ள சாலையை 4 வழி சாலையாக மாற்றம் செய்யப்படவுள்ளது;
காட்பாடி - திருவலம் இடையே உள்ள 7.9 கிலோ மீட்டர் சாலை ரூ.47 கோடி செலவில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. நான்கு வழி சாலைக்கான இதற்கான அடிக்கல் நாட்டு விழா செம்பராயநல்லூரில் இன்று நடந்தது.
இந்த திட்டத்திற்காக 170 மரங்களை வெட்ட முடிவு செய்துள்ளனர். மேலும் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாலை விரைவில் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கட்டபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.