வேலூர் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் கைதி தூக்கிட்டு தற்கொலை
வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் கைதி தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை
வேலூர் மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்று மாயமான ஆயுள் தண்டனை கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( 27 ) இவர் கடந்த 2012 ம் ஆண்டு அதேபகுதியில் உள்ள ஏரியில் ஆடு, மாடு மேய்த்து கொண்டு இருந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார் . இது தொடர்பான புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர் . இதையடுத்து அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு புதுக்கோட்டையில் அடைக்கப்பட்டு இருந்தார் . பின்னர் கடந்த 2017ம் ஆண்டு புதுக்கோட்டை சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் .
இந்நிலையில் வேல்முருகன், கடந்த 15 ம் தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது . 19 ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டிய வேல்முருகன் சிறைக்கு வரவில்லை. இது குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தப்பியோடிய கைதிகளை சிறை காவலர்களும் தேடிவந்தனர்.
இந்நிலையில் , இன்று காலை வேல் முருகனின் தந்தை, வீட்டின் பின்னால் வந்து பார்த்து போது, அங்குள்ள மரத்தில் வேல் முருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .