காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு

வள்ளிமலையில் அரசு கல்லூரி, சிப்காட் தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-09 09:45 GMT

காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைவிடம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிமலை சுப்ரமணியசாமி கோவில் மலை அடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார்.

இந்த பகுதியில் கல்லூரி அமைக்க போதுமான இடம் உள்ளதா என அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகிமண்டலம் ஊராட்சி குண்டலூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.

தாதிரெட்டி பள்ளியில் 250 ஏக்கரில் கனிமவள தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News