சிறப்பு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள சிறப்பு பொங்கல் பரிசு பொருட்களை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் துவக்கி வைத்தார்.;
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் சிறப்பு 20 இலவச பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக நீர் வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன்,இம்மாவட்டத்தில் 4 43000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இப்பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.