காட்பாடி வாக்குசாவடியில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்

வேலூர் மாநகராட்சி காட்பாடி டான் போஸ்கோ பள்ளி வாக்குசாவடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி வாக்களித்தனர்.;

Update: 2022-02-19 08:15 GMT

அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வாக்களித்தார்

வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வாக்களித்தார். அவருடன் அவரது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த்தும் வாக்களித்தார்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார், 

Tags:    

Similar News