100 நாள் வேலை திட்ட பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெற்றுவரும் உறிஞ்சு குழிகள் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

Update: 2022-01-24 14:45 GMT

நூறு நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சி குழிகள் பணிகள் நடைபெற்று வருவதை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஆர்ஐஸ்வர்யா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News