தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் - தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி பேட்டி.
அதிமுக-தேமுதிக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க விருப்பம் என்ன என்று எனக்கு தெரியாது. பா.ஜ.க தமிழகத்தில் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி கூறினார்..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளருமான கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது . அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அதிமுக எங்களது மிக முக்கியமான கூட்டணி கட்சி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவர்கள் தான் தலைமை தாங்குகின்றனர். அதிமுக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.. தேமுதிகவின் விருப்பம் என்ன என்று எனக்கு தெரியாது என்று தமிழக மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி கூறினார்..
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, பிரதமர் மோடி தமிழகத்திற்கென 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார், மேலும் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ்ஸும் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகம் நன்றாக தான் செயல்பட்டுள்ளது இவை எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.