காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது;

Update: 2021-06-04 05:40 GMT

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள், காட்பாடி பகுதியில் விற்பனை செய்ய பாக்கெட் சாராயத்தை மூட்டையில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 50 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரசமங்கலத்தை சேர்ந்த தளபதி (வயது 27), யோவான் (30), கழிஞ்சூரை சேர்ந்த சிலம்பரசன் (30), சேனூரை சேர்ந்த பாலாஜி (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News