வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 110.1 மி.மீ மழை
வேலூர் மாவட்டத்தில் மிக அதிக அளவாக அம்முண்டியில் 110.1 மி.மீ மழை பதிவானது
வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அம்முண்டியில் 10.1 மி.மீ மழை பதிவாகியது . வேலூர்மாவட்டத்தில் கோடைகாலம் முடிந்த பிறகும் கடந்த 26, 27ம் தேதிகளில் 90 டிகிரியாக வெயில் பதிவானது. 28 ம்தேதி 94.1 டிகிரியும் , நேற்று முன்தினம் 96.4 டிகிரியாக இருந்த வெயில் நேற்று 103.3 டிகிரியாக பதிவானது. இதனால் நேற்று காலை முதல் கடும் வெப்பம் காணப்பட்டது. அனல் காற்றும் வீசியதால் வாகனங்களில் செல்பவர் கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி , மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது . வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், திருவலம் உட்பட பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு தொடங்கிய மழை காலை 6 மணி வரை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூர் சர்க்கரை ஆலை ( அம்முண்டியில் ) 110.1 மி.மீ மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு : குடியாத்தம் -5.6 மி.மீ , காட்பாடி -25.4 , மேல்ஆலத்தூர் -7.2 , பொன்னை 18.2 , வேலூர் -15.6.
மாவட்டத்தில் மொத்தமாக 182.10 மி.மீ , சாரசரியாக 30.35 மி.மீ. பதிவாகி உள்ளது. வேலூரில் தாழ்வான பகுதியான கன்சால்பேட்டை குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் வேலூர் தற்காலிக மார்க்கெட்டில் ஒரு பகுதியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்குதலில் தத்தளித்த பொதுமக்களுக்கு நேற்றிரவு பெய்த மழை நிம்மதியை தந்துள்ளது.