பாமக தனித்து நின்றால் கூட வெற்றி பெறும்- அமைச்சர் பேச்சு

Update: 2021-03-20 05:15 GMT

பா.ம.க தனித்து நின்றால் கூட வெற்றி பெறும் என அமைச்சர் கேசி வீரமணி பேசினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமு அறிமுக கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும் போது, நாம் விவசாய கடன், நகை கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளோம். பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் ஒரு இளைஞன், துரைமுருகனை தோற்கடித்தார் என்ற வரலாற்றை காட்பாடியில் நாம் படைக்க வேண்டும் . பிரதமர் மோடி பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். அவர் முதல்வராக இருந்த குஜராத்திற்கு கூட இவ்வளவு செய்திருக்கமாட்டார்.

எய்ம்ஸ் மருத்துவ பல்கலைகழகம் உட்பட 11 மருத்துவகல்லூரிகளை நமக்கு வழங்கியுள்ளார். அதேபோல் பா.ம.க கடந்த 40 ஆண்டுகளாக போராடி வந்த 10.5% இடஒதுக்கீட்டை ஒரே கையெழுத்தில் தீர்த்து வைத்தவர் முதல்வர் பழனிச்சாமி. இன்றைய சூழலில் பா.ம.க தனித்து நின்றால் கூட வெற்றி பெறும் என கே.சி.வீரமணி பேசினார்.

Tags:    

Similar News