காட்பாடி: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
தமிழக ஆந்திர எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல். செய்யப்பட்டது;
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக-ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நெல்லூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வெங்கடய்யா(61) என்பவர் வந்துள்ளார்.
அவரை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சத்தி 56 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணம் காண்பிக்காததால் பணத்தை பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.