அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது வழக்கு பதிவு

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மீது வழக்கு பதிவு.;

Update: 2021-03-15 06:05 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார்.

இதனிடையே நேற்று முன்தினம்(13.03.2021) கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டணி கட்சியான பா.ம.க ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர் ஜெகன்மூர்த்தி பங்கேற்று பேசினார். தேர்தல் விதி முறைப்படி அனுமதி பெறாமல் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி, வேலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வேட்பாளர் ஜெகன் மூர்த்தி மற்றும் தனியார் மண்டப உரிமையாளர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News