ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு

கே.வி.குப்பம், கவசம்பட்டு ஊராட்சியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது

Update: 2021-05-17 12:15 GMT

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பொது மக்கள் வெளியே சுற்றித் திரிவதால் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. இதை தடுக்கும் வகையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ,ஊராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கவசம்பட்டு ஊராட்சியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ( 17.05.2021) கவசம்பட்டு ஊராட்சி சார்பில் ஊராட்சி செயலாளர் மூவேந்தன் தலைமையில் ஆட்டோவில் ஒலி பெருக்கி அமைத்து கவசம்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளில் மற்றும் விவசாயிகள் வசிக்கும் பகுதிகள், முக்கிய சாலைகள் இணைப்பு பகுதிகளில் கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதே போன்று செதுவாலை, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் கிராம ஊராட்சி செயலர்களும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News