இரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் தாய் தற்கொலை

4-வயது பெண் குழந்தையுடன் தாய் இரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சேகம்.;

Update: 2021-02-28 07:25 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் இவர் (CRPF-ல்) மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிப்புரிந்து வருகிறார். இவரின் மனைவி ஜெயந்தி (29) மற்றும் நந்திதா என்கின்ற நான்கு வயது பெண் குழந்தை ஆகியோர் கீழ் விலாச்சூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய் ஜெயந்தி மற்றும் 4 வயது பெண் குழந்தை இருவரும் இன்று அதிகாலை விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்தில் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை இரயிவே காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாய், மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News