குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை 3 மருந்து கடைகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2021-06-11 11:44 GMT

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மற்றும் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது அத்தியாவசியமாக மாறியுள்ளது . இதனை சாதகமாக பயன்படுத்தி மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்வதாக வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது . அதன்பேரில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் , அதிகவிலைக்கு மாஸ்க் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் .

இந்நிலையில் குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள மருந்து கடையில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்வதாக சப் - கலெக்டர் ஷேக் மன்சூருக்கு தகவல் கிடைத்தது . அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு ) சுசில் தாமஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குடியாத்தத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு செய்தனர் . அப்போது , 3 கடைகளில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்தது தெரியவந்தது . இதையடுத்த தலா ரூ .2 ஆயிரம் வீதம் 3 மருந்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர் .

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 6 கடைகளுக்கு தலா 1500, நகர பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்ற 30 பேருக்கு தலா 200 என அபராதம் வசூலிக்கப்பட்டது .

Tags:    

Similar News