பேர்ணாம்பட்டு அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பேர்ணாம்பட்டு ஏரிகுத்தி கிராம பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-06-25 13:51 GMT

பேர்ணாம்பட்டு ஏரிகுத்தி கிராம பகுதியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பேர்ணாம்பட்டு ஏரிகுத்தி கிராம பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வேலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் கோடீஸ்வரன் மற்றும் குழுவினர், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் குழுவினர் ஆகியோர் நேற்று ஏரிகுத்தி கிராமப் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது ஆம்பூர் வழியாக செல்ல இருந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மினி லாரியை பிடித்து அதில் சோதனை செய்ததில், சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் ஓட்டுனர் தப்பி ஓடியதைத் தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News