குடியாத்தத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாமகவினர் சாலையில் மதுவை கொட்டியும், மதுபாட்டில்களை உடைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கடந்த 14:ம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், உடனடியாக டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அப்பொழுது மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மது வகைகளை சாலையில் கொட்டியும் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சித்தூர் கேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.