மினி டிப்பர் லாரி மோதி மாணவன் உயிர் பிழைத்த அதிசயம்
குடியாத்தம் அருகே மினி டிப்பர் லாரி மோதி உயிர் பிழைத்த பள்ளி மாணவன்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்;
மினி டிப்பர் லாரி மோதி உயிர் பிழைத்த பள்ளி மாணவன்- பதைபதைக்கும்சிசிடிவி காட்சிகள்
குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் பலமனேரி நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி அருகே இன்று காலை 6 வயது பள்ளி மாணவன் ஒருவன் அவனுடைய சகோதரியுடன் சாலையில் நின்று கொண்டிருந்தான்
அப்பொழுது சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி மோதியது. இதனால் அங்கு இருந்தவர்கள் பதட்டத்துடன் ஓடி சென்று பார்த்த போது சிறு காயங்களுடன் மாணவன் லாரிக்கு அடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து எழுந்து ஓடி வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.