100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்;

Update: 2022-01-11 12:45 GMT

சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்ட சமுத்திரம் கிராமத்தில் மத்தியஅரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரானா தடுப்பூசி, தூய்மை இந்தியா, தேசிய இளைஞர் தினம்,பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதியோர்களுக்கான தேசிய உதவி எண் பிரதிகள் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய அரசின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி கூறுகையில், 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராமங்களில் பணியாற்றும் பணியாளர்கள், பணியில் ஈடுபடும் போது கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் . ஒன்றாக இணைந்து வேலை செய்யக்கூடாது. குடிப்பதற்கான தண்ணீர் தனித்தனியாக வீட்டிலிருந்து எடுத்து வந்தது குடிக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் அனைவருமே தனிநபர் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.

கிராமங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாக தரம் பிரித்து அதை தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக வழங்க வேண்டும். அப்பொழுதுதான் கிராமங்களில் தூய்மையைப் பாதுகாக்க முடியும்.

மேலும் கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால், பொதுமக்கள் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்றி அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் அரசு வெளியிடும் விதி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் எனவும்  கூறினார்.

நிகழ்ச்சியில் மத்திய அரசின் கள விளம்பர அலுவலர் ஜெயகணேஷ் மற்றும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. சாந்தி, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்,

Tags:    

Similar News