பேரணாம்பட்டு ஒன்றியத்தில் சுகாதார பணிகள்

பேரணாம்பட்டு ஒன்றியம் மாச்சம்பட்டு, சொக்கரிஷிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகள் நடைபெற்றது;

Update: 2022-03-27 07:35 GMT

பேரணாம்பட்டு ஒன்றியம் மாச்சம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மாச்சம்பட்டு, சொக்கரிஷிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் ஒட்டு மொத்த சுகாதாரப் பணிகள் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி தாமோதரன் (மாச்சம்பட்டு), பாபு (சொக்கரிஷி குப்பம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ஜெரோம் ஆனந்த் சுகாதாரப் பணியை தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட 2 ஊராட்சிகளில் பொது இடங்கள், தெருக்களில் குப்பைக்கூளங்கள், கழிவுகள் அகற்றப்பட்டும் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர் பாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சலீம்பாஷா, ஒன்றிய கவுன்சிலர் அபிராமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி பிரபு, லட்சுமி, சுபானந்தராஜ், ஊராட்சி செயலாளர்கள் மாதவன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News