பேரணாம்பட்டு கப்பல் கேப்டனிடம் நிலம் மோசடி

பேரணாம்பட்டு கப்பல் கேப்டனிடம் கடனுக்கு ஈடாக நிலத்தை எழுதி வாங்கி, கடனை திருப்பி தந்தவுடன் நிலத்தை தராமல் மோசடி செய்த மார்வாடி

Update: 2021-07-21 15:15 GMT

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கப்பல் கேப்டன் எஸ். பிரசாத் குமார் கடந்த 2007 ஆம் ஆண்டு அவரது தொழில் மேம்பாட்டிற்காக பேரணாம்பட்டு சேர்ந்த மார்வாடி சுரேந்திர குமார் மூலம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த அடகு வியாபாரி ரத்தினம் குமாரிடம் 20 லட்சம் கடனாகப் பெற்றார் இதற்கு ஈடாக பிரசாத் குமார் மற்றும் அவரது தாயார் ரங்கநாயகி பெயரில் உள்ள பேரணாம்பட்டு மற்றும் பத்திரப்பள்ளி கிராமத்தில் உள்ள வீட்டுமனை சுமார் நாலரை ஏக்கர் அளவில் உள்ள சுமார் 50 லட்சம் மதிப்பிலான சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்தை குடியாத்தம் மார்வாடி ரத்தினகுமார் மனைவி சுசிலா பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் .

பின்னர் மூன்று மாதத்தில் வட்டி மற்றும் அசலை 20 லட்சத்தை மீண்டும் பேர்ணாம்பட்டு மார்வாடி சுரேந்திர குமார் மூலம் ரத்தின குமாருக்கு கேப்டன் எஸ்.பிரசாத் குமார் பணத்தை செலுத்தி கணக்கை முடித்து உள்ளார். ரத்தினகுமார் வீட்டுமனை மட்டும் பிரசாத்குமாருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திரும்ப ஒப்படைத்து உள்ளார். ஆனால் பிரசாந்த் குமாரின் தாய் ரங்கநாயகிக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஒப்படைக்கவில்லை. நிலத்தை திரும்ப தரும்படி பல முறை ரத்தினகுமார் சுரேந்திர குமார் ஆகியோரிடம் கேட்டால் நிலத்தை மீண்டும் பத்திரப் பதிவு செய்து தர முடியாது என கூறியுள்ளாராம் . இதில் அதிர்ச்சி அடைந்த கப்பல் கேப்டன் எஸ் பிரசாத் குமார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் , குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி , பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் , வேலூர் மாவட்ட அபகரிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார் . இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags:    

Similar News