பேரணாம்பட்டில் வரி பாக்கி செலுத்தாத தோல் தொழிற்சாலை, ஓட்டல்களுக்கு சீல்

பேரணாம்பட்டு நகரில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் என 15 இடங்களில் சீல் வைக்கப்பட்டன

Update: 2022-03-24 06:11 GMT

பேரணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி என ரூ.3 கோடியே 34 லட்சத்து 57 ஆயிரம் பாக்கியாக உள்ளது.

இந்த நிலையில் வேலூர் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் குபேந்திரன் பேரணாம்பட்டு நகராட்சியில் நகராட்சி ஆணையர் செய்யது உசேன் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் வரி வசூலிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.

அப்போது பேரணாம்பட்டு நகரில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் என மொத்தம் 15 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.

வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதிக்குள் வரி நிலுவைத்தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த வருகிற 31-ந் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமை நகராட்சி கணினி மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தலாம் நகராட்சி ஆணையர் செய்யது உசேன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News