வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கை அம்மன் சிரசு திருவிழா மட்டுமே .

Update: 2023-05-15 05:02 GMT

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ,தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் கலந்து கொள்வார்கள் .

இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். வேலூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கை அம்மன் சிரசு திருவிழா மட்டுமே .

இன்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்த கோவிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். திரும்பும் திசையெல்லாம் வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது. அம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும். சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News