ரமலானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள்

குடியாத்தத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.;

Update: 2022-05-03 14:37 GMT

ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய காட்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரமலானை  முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தாஜூதீன் தலைமை தாங்கினார். நவாஸ், செயலாளர் குதுப்அலிஷா, பொருளாளர் முனவர்ஷரிப், மன்சூர்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலு விஜயன்எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், வட்டாட்சியர் லலிதா ஆகியோர் கலந்து கொண்டு 750 ஏழை எளியோருக்கு ரம்ஜான் கொண்டாடும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.

Tags:    

Similar News