கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.

Update: 2022-03-16 15:17 GMT

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் காட்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபக்க கரையில் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு, என்.எஸ். கே.நகர், நாராயணசாமி தோப்பு, கோபாலபுரம் ஆற்றோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம், பச்சையம்மன் கோவில்உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது.

முதற்கட்டமாக குடியாத்தம் காமராஜர் பாலம் பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளும், பச்சையம்மன் கோவில் பகுதியில் இருந்த வீடுகளும், கெங்கையம்மன் கோவில் ஆற்றோரம் இருந்த வீடுகளும் என சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

அதன் பின்னர் கோபலபுரம் ஆற்றோரம், நாராயண சுவாமி தோப்பு, என்.எஸ்.கே.நகர் என சுமார் ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதி மட்டும் அகற்றப்படாமல் உள்ளது அங்கும் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியிலும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த நோட்டீசை பதாகைகளாக மாற்றி அப்பகுதியில் கட்டினர்.

Tags:    

Similar News