குடியாத்தம் - சித்தூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

குடியாத்தம் சித்தூர் செல்லும் சாலையில் உள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்

Update: 2022-04-07 14:39 GMT

குடியாத்தத்தில்  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் துறை அதிகாரிகளிடம் பணிகள் விரைந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்துகூட்டத்தில் பேசிய கலெக்டர் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பண்ணை குட்டை பணிகளில் நிலுவையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணிகளை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த குறித்தும் ஆலோசனை நடத்தினார்,

குடியாத்தம் சித்தூர் சாலை, வேலூர் பள்ளிகொண்டா சாலை, பேரணாம்பட்டு செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடியாத்தம் சித்தூர் செல்லும் சாலையில் உள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News